என்பனபோல ஒன்றற்கு ஒன்று பொருத்தம் உடைத்து ஆதற்கண்ணும், அவற்கு நட்டான்- அவர்க்குத் தமன்-என்பனபோல ஒன்றற்கு ஒன்று நட்பு ஆதற்கண்ணும், நட்டார்க்குக் காதலன்-புதல்வர்க்கு அன்புறும்- என்பனபோல ஒன்றற்கு ஒன்று காதல்உடையது ஆதற்கண்ணும். வடுகர்அரசர்க்குச் சிறந்தார் சோழியஅரசர்-கற்பார்க்குச் சிறந்தது செவி- என்பன போல ஒன்றற்கு ஒன்று சிறத்தல் என்னும் பொருண்மைக்கண்ணும் வருவன எல்லாம் கொள்க. இன்னும் இதனானே, அரசர்க்கு அமைச்சன், நமக்கு நல்லன், |