ஏனைய முடிக்குஞ் சொற்கள் ஒப்பு எல்லை என்பனவற்றிற்கு உரியன. ‘இதனின் இற்று இது’ என்பதை நச்சினார்க்கினியர் விளக்கியவாறே இவரும் விளக்கியுள்ளார். அத்தொடர் உள்ள இற்று என்பதன் விளக்கம் சேனாவரையர் வரைந்ததே. ஏனைய செய்திகள் யாவும் அவ்விருவரும் சொற்றனவே. இனி, இவ்வைந்தாவது பற்றி இலக்கணக்கொத்து நூலார் |