சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-44179

மிகையாம். அன்றி அதுகூற வேண்டுவார்க்கு ‘நீங்கல் ஒப்பு எல்லை ஏதுப்பொருள்’
என்றல் மிகையாம். இரண்டும் கூறுதலே மரபுஎன்பார்க்கு ஏனையவற்றிற்கும் ‘இதனைச்
செய்வது இதுஎனல் அதன்பொருள்,’ ‘இதனால் செய்வது இதுஎனல் அதன்பொருள்’
என்றாற்போலச் சூத்திரம் செய்யாமை குன்றக் கூறலாய் முடியும் என உணர்க. மேலும்
இவ்வாறே காண்க.
 

அமைதி
 

ஏனைய வேற்றுமை போலாது ‘இதனின் இற்று இது’ என்று பொருள்படும்
ஐந்தாம்வேற்றுமை விளக்கம் இன்றி இருத்தலின், அவ்விதனின்இற்று இது என்பதன்
விளக்கம் நீங்கல் ஒப்பு எல்லை ஏது என்பன பற்றியது என்று இவ்வாசிரியர் விளக்கிக்
கூறி, நன்னூலார் கருத்துத் தொல்காப்பியத்திற்கு விளக்கமாதலை வலியுறுத்தியுள்ளமை
காண்க.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘ஐந்தாகுவதே
இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
இதனின் இற்று இது என்னும் அதுவே.’

‘வண்ணம்..................என்மனார்.’
வால்நா மலிநின்று அவற்றில் வரூஉம்
ஐந்து அவதியிலே.’
‘இன் உருபுஐந் தாவது இதனின்இத் தன்மைத்திது
என்னும் ஒருநான் கிடத்து.’
முழுதும்-(‘இல்லும் இன்னும்’)- நன்.299,
‘இல்லும் இன்னும் ஐந் தாவதன் உருபே.’

‘அச்சம் ஆக்கம் அதனொடு தீர்தல்
பற்றுவிடல் நீக்கம் ஒப்பெல்லை ஏது
பிறவும் அதன்பொருள் நிலையா கும்மே.’


தொல்.சொல்.77

78

வீ.சோ. 35

நே.சொல்.19
தொ.வி.60

மு.வீ.பெ. 61


62