சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

180 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

ஆறாம் வேற்றுமை
 

203
 
ஆறன் ஒருமைக்கு அதுவும் ஆதுவும்
பன்மைக்கு அவ்வும் உருபாம் பண்பு உறுப்பு
ஒற்றன் கூட்டம் பலவின் ஈட்டம்
திரிபின் ஆக்கம் ஆம்தற் கிழமையின்
பொருள்இடம் காலம் ஆம் பிறிதின் கிழமையின்
இதனதுஇது எனவரூஉம் அதனது பொருளே.
 
 

      இஃது ஆறாம் வேற்றுமை உருபும் பொருளும் உணர்த்துகின்றது.

இ-ள்: ஆறாம் எண்ணு முறைமைக்கண் நின்ற வேற்றுமையது ஒருமைப்
பொருண்மைக்கு அது என்பதும் ஆது என்பதும், பன்மைப் பொருண்மைக்கு அகரமும்
உருபாம்; பண்பும் உறுப்பும் ஒன்று பலகுழீஇயதும் வேறு பலகுழீஇயதும் ஒன்று திரிந்து
ஒன்றாதலும் ஆகிய தன்னொடு ஒற்றுமை உடைய பொருளான் வந்த தற்கிழமைக்
கண்ணும், பொருளும் நிலமும் காலமும் ஆகிய தன்னின் வேறாய் நின்ற பொருளான்
வந்த பிறிதின் கிழமைக்கண்ணும் ‘இப்பொருளினுடையது இப்பொருள்’ என்பது பட வரும்
அதனதுபொருள் என்றவாறு.
 

  ஈண்டுத் ‘தன்’ என்றது உருபு ஏற்கும் பொருளை.
‘ஆறன் உருபே அதுஆது அவ்வும்
வேறொன்று உரியதை தனக்குஉரி யதைஎன
இருபால் கிழமையின், மருவுற வருமே
ஐம்பால் உரிமையும் ஆன்றதற் கிழமை’
 


 

என்றாற் ஆசிரியர் அகத்தியனாரும் எனக்கொள்க.

பண்பின் கிழமை எனினும், ஒன்றியல் கிழமை எனினும் ஒக்கும். அதுதான்,
சாத்தனது இயற்கை- நிலத்து அகலம்- என்பனபோல வரும் இயற்கைக் கிழமையும்,
சாத்தனது நிலைமை- சாத்தனது இல்லாமை- என்பனபோல வரும் நிலைக் கிழமையும்
என இரு வகைப்படும்.