சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-45181

என்றாற் ஆசிரியர் அகத்தியனாரும் எனக்கொள்க.

பண்பின் கிழமை எனினும், ஒன்றியல் கிழமை எனினும் ஒக்கும். அதுதான்,
சாத்தனது இயற்கை- நிலத்து அகலம்- என்பனபோல வரும் இயற்கைக் கிழமையும்,
சாத்தனது நிலைமை- சாத்தனது இல்லாமை- என்பனபோல வரும் நிலைக் கிழமையும்
என இரு வகைப்படும்.உறுப்பு ஆவது ஒரு பொருளினது ஏகதேசம். அவ்வுறுப்பின்
கிழமைதான் யானையது கோடு, புலியது உகிர் என்பன போல்வன.

ஒன்று பலகுழீஇயது- எள்ளது குப்பை, கொள்ளது குவியல் என்பன போல்வன.

வேறுபல குழீஇயது- படையதுகுழாம், மணியது தொகுதி என்பன போல்வன.

திரிபின் ஆக்கம் எனினும், மெய்திரிந்து ஆயது எனினும் ஒக்கும். அதுதான், சிறிது
திரிவதூஉம் முழுவதூஉம் திரிவதூஉம் என இருவகைப்படும். அவற்றுள் சிறிது
திரிவதுதான் சாத்தனது செயற்கை-சாத்தனது கற்றறிவு என்பனபோல வரும்
செயற்கைக்கிழமையும், அரசனது முதுமை-அரசனது முதிர்வு என்பன போல வரும்
முதுமைக் கிழமையும், சாத்தனது தொழில்- சாத்தனது செலவு என்பன போல வரும்
வினைக்கிழமையும் என மூவகைப்படும். முதுமை பிறிதொரு காரணம் பற்றாது
ஒருதலையாக அப்பொருட்கண் தோன்றும் பருவம் ஆகலின் செயற்கையுள் அடங்காது
என்க. சாத்தனது ஒப்பு, தொகையது விரி, பொருளது கேடு, சொல்லது பொருள்
அவையும் அன்ன. முழுவதூஉம் திரிவது, எள்ளது சாந்து- கோட்டது நூறு என்பன
போல்வன. அத்திறத்தன எல்லாம் தற்கிழமை.

இனிப் பிறிதின் கிழமை மூன்றனுள் பொருள்பிறிதின் கிழமைதான், சாத்தனது
உடைமை- சாத்தன் தோட்டம் என்பன போலவரும் உடைமைக் கிழமையும், மறியதுதாய்-
மறியது தந்தை- என்பனபோல வரும் முறைக்கிழமையும், இசையது கருவி-வனை கலத்தது
திகிரி-என்பன போல வரும் கருவிக்கிழமையும், அவனது துணை-அவனது
இணங்கு-என்பன போலவரும் துணைக்கிழமையும், நிலத்தது ஒன்றிக்கலம்- சாத்தனது
விலைத்தீட்டு- என்பனபோல வரும் கலக்கிழமையும் (கலமாவது ஓலை. அஃது
இருபொருட்கு உரிமை உடைமையின்