சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

182 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

உடைமையின் வேறு ஆயிற்று), ஒற்றியது முதல்- ஒற்றியது பொருள்-என்பனபோல
வரும் முதற் கிழமையும், கபிலரது பாட்டு என்பது போல வரும் செய்யுள் கிழமையும்
(பாரியது பாட்டு எனவும் வருதலின் இதுவும் இப்பொருட்கு உரித்து; பரணரது பாட்டியல்
என்பதும் அது), காட்டது யானை என்பது போலவரும் வாழ்ச்சிக் கிழமையும் என எண்
வகைப்படும்.

இனி இடப்பிறிதின் கிழமைதான், முருகனது குறிஞ்சி நிலம் என்பதுபோல வரும்/
கிழமைக் கிழமையும், யானையது காடு என்பது போல வரும் வாழ்ச்சிக் கிழமையும் என
இருவகைப்படும்.

இனிக் காலப் பிறிதின் கிழமைதான், வெள்ளியது ஆட்சி என்பதுபோல வரும்
கிழமைக் கிழமைத்தாய் நிற்கும்.

  ‘தனாது, வெள்வேல் யானை வளவன் கொல்லி மீ மிசை,
      என்பதுபோல ஆது உருபும், சாத்தன ஆடை என்பது போல அகர உருபும்
வந்தன காண்க. பிறவும் அன்ன. பெரும்பான்மை பற்றி ‘இதனது இது’ என்றாரேனும்,
பன்மைக்கண் ‘இதன இவை’ என்பதுபட வருதல் கொள்க. 45
 

விளக்கம்
 

ஆறாம் எண்ணும் முறையை- 194 ஆம்நூற்பாவின் கண்ணது.

தற்கிழமையைச் சேனாவரையர் முதலாயினார் ஒன்று பல குழீஇய தற்கிழமை,
வேறுபல குழீஇய தற்கிழமை, ஒன்றியல் கிழமை, உறுப்பின் கிழமை, மெய்திரிந்து ஆய
தற்கிழமை என்ற ஐந்து வகையாகக் கொண்டனர்.
 

 

பண்பு- ஒன்றியற் கிழமை.
உறுப்பு- உறுப்பின் கிழமை.