சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-45183

  ஒன்றன்கூட்டம்- ஒன்றுபல குழீஇய தற்கிழமை

பலவின் ஈட்டம்- வேறுபல குழீஇய தற்கிழமை

திரிபின் ஆக்கம்- மெய்திரிந்து ஆயதற்கிழமை
 

பொருள் நிலம் காலம் என்பன தொல்காப்பிய உரையாசிரியரால் பொருள் இடம் காலம் எனப்பட்டன.
 

 

‘இயற்கையின் உடைமையின் முறைமையின் கிழமையின்
செயற்கையின் முதுமையின் வினையின் என்றா
கருவியின் துணையின் கலத்தின் முதலின்
ஒருவழி உறுப்பின் குழுவின் என்றா
தெரிந்துமொழிச் செய்தியின் நிலையின் வாழ்ச்சியின்
திரிந்துவேறு படூஉம் அன்ன பிறவும்
கூறிய மருங்கின் தோன்றும் கிளவி
ஆறன் பால என்மனார் புலவர்.’          தொல்.சொல். 80
 

என்ற நூற்பாவை ஒட்டி ஆசிரியர் சேனாவரையரைப் பின்பற்றி விளக்கந்
தந்துள்ளார். இவற்றுள்,
 

 

பண்பு- இயற்கை, நிலை.
உறுப்பு- ஒருவழி உறுப்பு.
ஒன்றன் கூட்டம்; பலவின் ஈட்டம்- குழு.
திரிபின் ஆக்கம்- செயற்கை, முதுமை, வினை.
 

பொருட்பிறிதின்கிழமை- உடைமை, முறைமை, கருவி, துனை, கலம், முதல்,
தெரிந்து மொழிச்செய்தி.

கிழமைக் கிழமையில், முருகனது குறிஞ்சி நிலம் என்றாற்போல்வன நிலப்பிறிதின்
கிழமை;

வெள்ளியது ஆட்சி என்றாற்போல்வன காலப்பிறிதின் கிழமை. வாழ்ச்சிக்
கிழமையில், காட்டது யானை என்றாற்