போல்வன பொருட்பிறிதின் கிழமை; யானையது காடு என்றாற் போல்வன நிலப்பிறிதின் கிழமை.திரிந்து வேறுபடுவனவற்றுள், எட்சாந்து, கோட்டு நூறு என்பன முழுவதும் திரிந்தன; ஏனைய சிறிது திரிந்தன. கலக்கிழமை- நிலத்து ஒற்றிக்கலம்; அஃதாவது நிலத்தை ஒற்றி வைத்த ஓலை. இவ்வோலை ஒற்றி வைப்பவன் ஒற்றி வாங்குபவன் என்ற இருவருடைய தொடர்பும் உடையது ஆதலின், உடைமையாகிய ஒருவருக்கே உரிய தொடர்பின் வேறுபட்டுத் தனியே கூறப்பட்டது. இது நச்சினார்க்கினியரைப் பின்பற்றியது. தெரிந்த மொழியால் செய்யப்படுதலின் செய்யுளை ‘தெரிந்து மொழிச் செய்தி’ என்றார். செய்யுள் இயற்றியோன், இயற்றுவித்தோன் என்ற இவர் பற்றியும் முறையே கபிலரது பாட்டு, பாரியது பாட்டு என்றாற்போல வருதலின் இரு பொருட்கும் உரித்து எனப்பட்டது. அது உருபு, அகர உருபின் எடுத்துக்காட்டுக்கள் நச்சினார்க்கினியரால் வரையப்பட்டவை. ‘இதன இவை’ என்ற வாய்பாடு நச்சினார்க்கினியர் சேனாவரையர் இருவராலும் குறிக்கப்பட்டது. |