| உரிமையாய்த் தோன்றல் உரைக்கப் படுமே வேறாய்த் தோன்றல் வேறிடத் துஞ்செலும் நிலைமையில் உடைமைகள் பலவும் ஆகும்’
‘குறையை இன்றும் கூறின் பெருகும்’ |
இ.கொ.40 41 |
என்று கூறியனவும், பிரயோகவிவேகநூலார் |
| ‘முற்றிய காரக மாம்கிரியா சட்டி மொய்குழலாய் பற்றிய பேதம் அபேதம்என் றானசம் பந்தசட்டி ஒற்றிய காரகம் ஆகாது’ |
17 |
என்று கூறி அந்நூற்பாவிற்கு எழுதிய உரையையும் நோக்குக. |
சூறாவளி
|
சொல்லின் திரிபே பொருள் என அபேதம் கூறுவார் மதம்பற்றித் தொகையது விரி- பொருளது கேடு- என்பனவற்றோடு சொல்லது பொருள் என்பதனையும் சிறிது திரிந்ததற்கு உதாரணமாகக் காட்டினார். மேல் சொல்லாவது இருதிணை ஐம்பால் பொருளையும் ஒருவன் உணர்தற்குக் கருவியாம் ஓசை எனப் பேதமாகக் கூறியதை மறந்தார் போலும். |
அமைதி |
சொல்லைப் பொருளின் பேதமாகவும், அபேதமாகவும், பேதாபேதமாகவும் கொள்ளும் மரபு தொல்காப்பியனாருக்கும் உளதாதல், |
| ‘கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள’
‘வம்பு நிலையின்மை’ ‘நம்பும் மேவும் நசையா கும்மே’ | தொல்.சொல்.372 327 329 |
முதலிய நூற்பாக்களான் விளங்கிக் கிடப்பது காண்க. |