சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-49,50211

  ‘அளபெடைப் பெயரே அளபெடை இயல.’

115,122,140

 
  ‘முறைப்பெயர்க் கிளவி ஏயொடு சிவணும்.’

116

 
  ‘அயல்நெடி தாயின் இயல்பா கும்மே.’

126

 
  ‘முறைப்பெயர்க் கிளவி முறைப்பெயர் இயல.’

128

 
  ‘மெய்உயிர் இறுதி விரவுப் பெயர்ச்சொல்
உயர்திணைப் பெயரொடும் ஒத்து நடக்கும்.’

131

 
  ‘ஆவியும் ஒற்றும் அந்தம் ஆகிய
அஃறிணைப் பெயரெலாம் ஏயொடு சிவணும்.’

132

 
  ‘அம்ம அசைச்சொல் நீட்டமும் விளிக்கும்.’

133


சிறப்பு விதி (208-215)
 

208. ஐஇறு பொதுப்பெயர்க்கு ஆயும் ஆவும்
உருபாம் அல்லவற்று ஆயும் ஆகும்.
 

இஃது ஐகார ஈற்றுப் பொதுப் பெயர்க்கு அவ்வைகாரம் ஆய்- ஆயும் ஆ-
ஆயும் திரிந்து விளியேற்றலும், உயர்திணை அஃறிணைப் பெயர்க்கு அஃது ஆயாய்
ஈறுதிரிந்து விளியேற்றலும் உருபாம் என்றவாறு.

வரலாறு: அன்னை- அன்னாய்.

  ‘அன்னா அன்னா அலந்தேன் எழுந்திராய்’,
அத்தை- அத்தாய் அத்தா எனவும்,
நங்கை- நங்காய், மடந்தை- மடந்தாய் எனவும்,
‘சிறுமீன் கவுள்கொண்ட செந்தூவி நாராய்’

 ஐங்குறு. 68

 
  ‘கொன்றாய் குருந்தே கொடிமுல்லாய் வாடினீர்’

 திணை.நூற்.81

 
  எனவும் வரும்.

50


விளக்கம்

 

எய்தியது- சென்ற நூற்பாவான் எய்திய இயல்பும் ஏகாரம் பெறுதலும் ஆகிய விளியேற்கும் நிலை.