சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

210 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே.’
 

140

 
  ‘அயல்நெடி தாயின் இயற்கை ஆகும்.’

142

 
  ‘முறைப்பெயர்க் கிளவி முறைப்பெயர் இயல.’

147

 
  ‘கிளந்த இறுதி அஃறிணை விரவுப் பெயர்
விளம்பிய நெறிய விளிக்குங் காலை.’

150

 
  ‘புள்ளியும் உயிரும் இறுதி யாகிய
அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும்
விளிநிலை பெறூஉம் காலம் தோன்றின்
தெளிநிலை உடைய ஏகாரம் வரலே.’

151

 
  ‘அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம்
அம்முறை பெயரொடு சிவணா தாயினும்
விளியொடு கொள்ப தெளியு மோரே.’

153

 
  ‘இகரம்ஈ காரமாம் ஐஆய்ஆம் ஏயாம்
உகர ஓகார உயிர்கள்- பகர்விளிகள்
அண்மை யிடத்தும் அளபெடைப் பெயர்க்கண்ணும்
உண்மை இயல்பாய் உறும்.’

நே. சொல்.25

 
  ‘விரவுப்பேர் எல்லாம் விளிக்குங்கால் முன்னை
மரபிற்றாம் அஃறிணைப்பேர் வந்தால்- மரபின்
கொளவரும் ஏகாரமும்.’

29

 
  முழுதும்

நன்.305

 
  ‘எப்பெயர்க் கண்ணும் இயல்பும் ஏயும்
இகர நீட்சியும் உருபாம் மன்னே.’

தொ.வி.70

 
  ‘இஈ யாகும் ஐஆ யாகும்.’

மு.வீ.பெ.101

 
  ‘உகரம் ஓகாரம் ஏயொடு சிவணும்.’

102

 
  ‘உகரம் தானே குற்றிய லுகரம்.’

103

 
  ‘அளபெடை மிகூஉம் இகர இறுபெயர்
இயற்கைய ஆகும் என்மனார் புலவர்.’

105

 
  ‘அண்மைப் பெயர்இயல் பாக விளிக்கும்.’

107

 
  ‘ஆன்என் இறுதி இயற்கை ஆகும்.’

112