அமைதி |
| ‘பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே’ | தொல்-பொருள். 624 |
என்ற மரபியல் நூற்பாவான் பின் அடைஇன்றிப் பெண் ஆண் பிள்ளை என்ற சொற்கள் வாளா வரின் அவை உயர்திணையையே குறிப்பன என்பதனைப் பேராசிரியர் உரையாலும் உணரலாம். முன் நூற்பாக்களைக் காட்டிய முனிவர் பின்னர் வரும் நூற்பாவை விடுத்தது வியக்கத்தக்கது. நச்சினார்க்கினியரும் இவற்றை உயர்திணைப் பெயர்களாய் விளிமரபில் கூறியவாறு காண்க. சேனாவரையரும் பெண்பால் என்பதைக் காட்டியமை நோக்குக. பெண் ஆண் என்பன விரவுப் பெயராகும் பிற்காலத்தார் மரபையும் ஆசிரியர் உட்கொண்டு எடுத்துக்காட்டுக்கள் தந்தமையும் காண்க. |
ஒத்த நூற்பாக்கள் |
| ‘இஈ யாகும் ஐஆய் ஆகும்.’ | தொல்.சொல். 121 |
| ‘ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும்.’ | 122 |
| ‘உகரம் தானே குற்றிய லுகரம்.’ | 123 |
| ‘அளபெடை மிகூஉம் இகர இறுபெயர் இயற்கைய வாகும் செயற்கைய என்ப.’ | 125 |
| ‘அண்மைச் சொல்லே இயற்கை ஆகும்.’ | 127 |
| ‘ஆள்என் இறுதி இயற்கை ஆகும்.’ | 132 |
| ‘அளபெடைப் பெயரே அளபெடை இயல.’ | 135,141 |
| ‘முறைப்பெயர்க் கிளவி ஏயொடு வருமே.’ | 136 |
| ‘தொழிற்பெய ராயின் ஏகாரம் வருதலும் வழுக்கின்று என்மனார் வயங்கி யோரே.’ | 139 |
| ‘பண்புகொள் பெயரும் அதனோர ற்றே’ | 140 |