சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

208 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  நம்முன் நம்முனா என்றாதல்
‘ஏனைப்புள்ளி ஈறுவிளி கொள்ளா’

தொல்.சொர். 129

என்பதனாலும்
 
  அம்ம அம்மா என்றாதல்
‘அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம்
அம்முறை பெயரொடு சிவணாது ஆயினும்
விளியொடு கொள்ப தெளியு மோரே’

153

என்பதனாலும் கொள்ளப்படும்.

இந்நூற்பா உரையில் காணப்படும் எடுத்துக்காட்டுகளுள் பெரும்பாலான
நச்சினார்க்கினியர் தொல்காப்பிய விளிமரபு நூற்பாக்களுக்குத் தந்த
எடுத்துக்காட்டுக்களை உடன் கொண்டே தரப்பட்டுள்ளன.

ஆண் பெண் முதலிய ணகரஈற்றுச் சொற்கள் விளி ஏற்றலைத் தொல்காப்பியனார்
கூறாராகவே, அவை போன்ற சிலவே இவ்வாசிரியர் இந்நூலுள் புதியனவாகக்
கொண்டனவாம்.
 

சூறாவளி
 

பால்காட்டும் ஈறு இன்றேனும் பொருள் வகையான் ஆண்பால் பெண்பால்
என்பன அஃறிணைக்கும் உண்மையின் அவை இருதிணைக்கும் பொதுவாய்ச்
சொல்தன்மையால் அஃறிணைப் பெயராய் நிற்கும் அவற்றை ஆண்பால் கூறாய்
பெண்பால் கூறாய் என லகரஈற்று உயர்திணைப் பெயர்க்கு உதாரணம் காட்டல்
பொருந்தாமை அறிக. அவை இருதிணைக்கும் பொதுவாதல் ‘ஆண்பால் எல்லாம் ஆண்
எனற்கு உரிய’ ‘பெண்பால் எல்லாம் பெண்எனற்கு உரிய, என்னும் மரபியல்
சூத்திரங்களானும் உணர்க.