| தூங்கல் முதலியன ‘கிளந்த இறுதி .... .... .... காலை” | 150 |
என்பதனாலும், |
| நெஞ்சம், குருகு என்ற இயல்பு விளி ‘புள்ளியும் உயிரும் இறுதி யாகிய அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும் விளிநிலை பெறூஉம் காலம் தோன்றின் தெளிநிலை உடைய ஏகாரம் வரலே’ | 151 |
என்ற நூற்பாவின் ‘தெளிநிலை உடைய’ என்ற மிகையானும், இதண்- இதணே முதலாக ஏகாரம் பெற்று அஃறிணைச் சொற்கள் விளியேற்குமாறு ‘புள்ளியும் உயிரும்’ என்ற அதே நூற்பாவானும் கொள்ளப்பட்டன. |
| சுடர்த்தொடீஇ- ‘இ ஈயாகும்’ | தொல்.சொல். 121 |
| தாழ்குழலே- ‘ஏனைப் புள்ளி ஈறுவிளி கொள்ளா’ | 129 |
என்பவற்றால் கொள்ளப்பட்டன. தொழீஇ-தொழீஇஇ என அளபெடுத்துப் பின் இஈ யாகாது இயல்பாதலும், உழாஅன் கிழாஅன் என்பன உழாஅஅன், கிழாஅஅன் என அளபெடுத்து இயல்பாதலும், சிறாஅர், மகாஅர், மாஅல், என்ற பெயர்கள் அளபெடுத்து இயற்கையாய் விளியேற்றலும். |
| ‘அளபெடை மிகூஉம் இகர இறுபெயர் இயற்கைய ஆகும் செயற்கைய என்ப’ | 125 |
| ‘அளபெடைப் பெயரே அளபெடை இயல’ | 135 |
| ‘அளபெடைப் பெயரே அளபெடை இயல’ | 149 |
| ‘அளபெடைப் பெயரே அளபெடை இயல’ | 151 |
என்ற நூற்பாக்களால் கொள்ளப்படும். இவற்றுள் அளபெடாது வரும் உழான், கிழான், கோன், சிறார், மகார், மால் என்பன அளபெடாது நிற்றல் செய்யுளின் சந்த இன்பம் நோக்கி விகாரப்பட்டு வந்ததாகக் கொள்ளப்படும். |