சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

206 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  குரிசில், தோன்றல் என்பன
‘ஏனைப் புள்ளி ஈறுவிளி கொள்ளா’

129

என்பதனானும்,
 

  ஆண்பால் பெண்பால் என்பன
‘அயல்நெடி தாயின் இயற்கை யாகும்’

142

என்பதனானும் கொள்ளப்பட்டன.

திருமாலே முதலியன

  ‘ஏனைப் புள்ளி ஈறுவிளி கொள்ளா’

129

என்பதனால் கொள்ளப்பட்டன.

ஆய், ஆயே என்பன

  ‘ஏனைப் புள்ளி ஈறுவிளி கொள்ளா’

129

என்பதனால் கொள்ளப்பட்டன.

பிணா, சாத்தி, பூண்டு, அழிதூ என விரவுப் பெயர்கள் இயல்பாதலும் ஏகாரம் பெறுதலும்,
 

  ‘கிளந்த இறுதி அஃறிணை விரவுப்பெயர்
விளம்பிய நெறிய விளிக்குங் காலை’

150

என்பதனால் கொள்ளப்பட்டன.

தந்தை, அன்னை, மகன், முதலிய விரவுப் பெயர்கள் இயல்பாதலும். சாத்தீ
முதலியன இகரம் ஈகாரமாதலும் ‘கிளந்த இறுதி’ என்ற நூற்பாவினாலேயே
கொள்ளப்பட்டன.
 

  மகன் மகனே மருமகன் மருமகனே என்பன
‘முறைப்பெயர்க் கிளவி ஏயொடு வருமே’

136

என்பதனாலும்
 
  மகள் மகளே மருமகன் மருமகளே என்பன
‘முறைப்பெயர் எல்லாம் முறைப்யெர் இயல’

147

என்பதனாலும்,