| ‘ஏனை உயிரே உயர்திணை மருங்கின் தாம்விளி கொள்ளா என்மனார் புலவர்’ | 124 |
என்ற நூற்பாவில் வேண்டா கூறி வேண்டியது முடித்தலான் கொள்ளப்பட்டன. நம்பன், பார்ப்பன மகனே, தென்னவனே, மன்னவனே தம்முனே என்பன. |
| ‘ஏனைப் புள்ளி ஈறுவிளி கொள்ளா’ | 129 |
என்ற நூற்பாவில் வேண்டா கூறி வேண்டியது முடித்தலான் கொள்ளப்பட்டன. |
| சேரமான் மலையமான் என்ற இயல்புவிளி ‘ஆன்என் இறுதி இயற்கை யாகும்’ | 132 |
என்பதனால் கொள்ளப்படும். |
| கடவுள், அடிகள், பார்ப்பன மாக்கள்,- இயல்பாயினமை ‘ஏனைப் புள்ளி ஈறுவிளி கொள்ளா’ | 129 |
என்பதனால் கொள்ளப்பட்டது. |
| கோமாள் கடியாள் என்பன இயல்பாயினமை ‘அயல்நெடி தாயின் இயற்கை யாகும்’ | 142 |
என்பதனால் கொள்ளப்பட்டது. |
| அகவன், மகளே, மாந்தர், கேளிர், பெண்டிர் என்பன ‘ஏனைப் புள்ளி ஈறுவிளி கொள்ளா’ | 129 |
என்பதனால் கெள்ளப்பட்டன.
இளையவரே வந்தவரே கரியவரே என்பன |
| ‘தொழிற்பெய ராயின் ஏகாரம் வருதலும் ‘வழுக்கின்று என்மனார் வயங்கி யோரே’ | 139 |
| ‘பண்புகொள் பெயரும் அதனோர ற்றே’ | 140 |
என்பனவற்றால் கொள்ளப்பட்டன. |