சில-துறைவன் துறைவ- ஊரன் ஊர-என அன் ஈறு அண்மைக்கண் ஈறு கெடுதலும், சில-நம்பன் நம்பான்- எம்பெருமன் எம்பெருமான்- என அன்ஈறு ஈற்று அயல் நீடலும், சிலதுறைவன் துறைவா- ஊரன் ஊரா- சோழன் சோழா- என அன் ஈறு அயல் நீண்டு ஈறு கெடுதலும் (ஏடா என்பது படர்க்கைப் பெயர் ஆகாது, தோழன் முன்னிலைப் பெயராயே தோழா என்னும் பொருட்டாய் நிற்பது ஒன்று ஆதலின் ஈண்டைக்கு ஆகாது என்க,) சில-ஐயன் ஐயாவோ- அன்பன் அன்பாவோ- என அன்ஈறு புலம்பின்கண் ஈறு அழிந்து அயல் நீண்டு பிறிது வந்து அடைதலாய் ஓகாரம் மிகுதலும், சில- வந்தான் வந்தாய்- சென்றான் சென்றாய்- என ஆன் ஈறுஇறுதி யவ்வொற்றாயும், சில-வாயிலான் வாயிலோயே எனஆன் ஈறும், கிழவன்- |