| | ‘மூன்றுஐந் தொடுஆறு கரணம் பெறும்முரட் கோளியதே மூன்றுஇரு மூன்றொடு நான்காம்’ | வீ.சோ.43 |
என்று மயக்கம் பற்றிக் குறிப்பிடும். நேமிநாத நூலார் சுருக்கமாக, |
| | ‘வேற்றுமை ஒன்றன் உரிமைக்கண் வேறொன்று தோற்றல் உருபு தொகவருதல்- ஏற்றபொருள் மாறினும் தானிற்றல், வந்துஒன்றின் ஒன்றேற்றல் தேறவரும் மெய்ந்நூல் துணிபு.’ | நே.சொல்.21 |
என்ற நூற்பாவால் பொருள்மயக்கம், உருபுமயக்கம் உருபுதொகுதல், பிறிதுபிறிதேற்றல் என்பனவற்றைக் குறிப்பிட்டுள்ளார். இனி, இலக்கணக்கொத்து நூலார் ஒப்பாய் நிற்கும் உருபுகளும், ஒருபொருட்கே பலஉருபுகள் வருவனவும், வேறு உருபுகள் வருவனவும், ஆகிய மூவிலக்கணமும் ஒருங்கே தோன்ற வினைமுதல் முதலாகச் செய்த சிறப்பு நூற்பாக்களாகியவை: |
| | ‘ஒன்று மூன்றுநான்கு ஆறெனும் உருபொடு வருமே வினைதல் எனவகுத் தனரே’ | 44 |
| | ‘எல்லா உருபொடும் செயப்படு பொருள்எழும்.’ | 45 |
| | ‘ஒன்று மூன்றுநான்கு ஐந்தாறு உருபொடு கருவி வருமெனக் கருதினர் பெரியோர்.’ | 46 |
| | ‘எல்லா உருபொடும் கொள்வோன் எழுமே.’ | 47 |
| | ‘இரண்டுநான் கைந்தொடு எழுமே நீக்கம்.’ | 48 |
| | ‘நான்கைந்து ஆறே ழொடுகுறை நடக்கும்.’ | 49 |
| | ‘ஒன்றிரண்டு நான்கே ழோடிடம் எழுமே.’ | 50 |