| | ‘அன்ன பிறவும் தொன்னெறி பிழையாது உருபினும் பொருளினும் மெய்தடு மாறி இருவயின் நிலையும் வேற்றுமை எல்லாம் திரிபிடன் இலவே தெளியு மோர்க்கே.’ | 111 |
என்ற புறனடை நூற்பாவால் நோயை நீங்கினான்- நோயின் நீங்கினான்; சாத்தனை வெகுண்டான்- சாத்தனொடு வெகுண்டான்; முறையாற்குத்தும் குத்து- முறையிற்குத்தும் குத்து; கடலொடு காடு ஒட்டாது- கடலைக் காடு ஒட்டாது முதலிய பொருள் மயக்கங்களும், |
| | ‘இதனது இதுஇற்று என்னும் கிளவியும் அதனைக் கொள்ளும் பொருள்வயி னானும் அதனால் செயப்படற்கு ஒத்த கிளவியும் முறைக்கொண்டு எழுந்த பெயர்ச்சொற் கிளவியும் பால்வரை கிளவியும் பண்பின் ஆக்கமும் காலத்தின் அறியும் வேற்றுமைக் கிளவியும் பற்றுவிடு கிளவியும் தீர்ந்துமொழி கிளவியும் அன்ன பிறவும் நான்கன் உருபின் தொன்னெறி மரபின தோன்ற லாறே.’ | 110 |
என்ற நூற்பாவால் நான்கன் பொருளொடு இரண்டாவதும் மூன்றாவதும் ஐந்தாவதும் ஆறாவதும் ஏழாவதும் மயங்கலும், |
| | ‘ஏனை உருபும் அன்ன மரபின மானம்இலவே சொல்முறை யான’ | 111 |
என்ற நூற்பாவால், நூலதுகுற்றம் கூறினான்- நூலைக் குற்றம் கூறினான்; அவட்குக் குற்றேவல் செய்யும்- அவளது குற்றேவல் செய்யும் முதலிய பொருள் மயக்கங்களும் தொல்காப்பியனாரால் கொள்ளப்பட்டன. வீரசோழியம் |
| | ‘தெரிகருத்தா, ஆதியது ஆறொடு மூன்றும் பெறும் என்பர் ஆதியையே ஓதினர் தான்தெரி யாக்கரு மத்திற்கு ஒழிகருமம் மேதகு மூன்றுஇரண்டு ஆறுநான் காம்என்பர்.’ | வீ.சோ.42 |