| | ‘ஈற்றுப்பெயர் முன்னர் மெய்யறி பனுவலின் வேற்றுமை தெரிப உணரு மோரே’ | 96 |
என்ற நூற்பாவால் புலி கொல் யானை முதலிய தொடர்ப் பொருள்களின் ஐயம் அறுத்தலும், |
| | ஓம்படைக் கிளவிக்கு ஐயும் ஆனும் தாம்பிரி விலவே தொகைவரு காலை’ | 97 |
என்ற நூற்பாவால், ‘புலி போற்றி வா’ என்ற தொடர் புலியைப் போற்றிவா- புலியால் போற்றி வா- என இரண்டாவதனொடும் மூன்றாவதனொடும் மயங்குதலும் |
| | ‘ஆறன்மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்கு ஏழும் ஆகும் உறைநிலத் தான’ | 98 |
என்ற நூற்பாவால், ‘காட்டியானை’ என்ற தொடர் காட்டது யானை- காட்டின்கண்யானை- என ஆறாவதனொடும் ஏழாவதனொடும் மயங்கலும், |
| | ‘குத்தொக வரூஉம் கொடையெதிர் கிளவி அப்பொருள் ஆறற்கு உரித்து மாகும்’ | 99 |
என்ற நூற்பாவால் ‘நாகர்பலி’ என்ற தொடர் நாகர்க்குப் பலி- நாகரதுபலி- என நான்காவதனொடும் ஆறாவதனொடும் மயங்கலும், |
| | ‘அச்சக் கிளவிக்கு ஐந்தும் இரண்டும் எச்சம் இலவே பொருள்வயி னான.’ | 100 |
என்ற நூற்பாவால் ‘பழி அஞ்சம்’ என்ற தொடர் பழியை அஞ்சும்- பழியின் அஞ்சும் என இரண்டாவதனொடு ஐந்தாவது மயங்குதலும், |