| | ‘சினைநிலைக் கிளவிக்கு ஐயும் கண்ணும் வினைநிலை ஒக்கும் என்மனார் புலவர்’ | 85 |
என்ற நூற்பாவால் கோட்டைக்குறைத்தான் என்ற இரண்டாவதன் பொருட்கண் கோட்டின்கண் குறைத்தான் என்ற ஏழாவது ஒத்த உரிமையோடு மயங்குதலும், |
| | ‘கன்றலும் செலவும் ஒன்றுமார் வினையே’ | 86 |
என்ற நூற்பாவால் சூதினைக்கன்றினான்- நெறியைச் சென்றான்- என்ற இரண்டாவதன் பொருட்கண் சூதின்கண் கன்றினான்- நெறிக்கண் சென்றான்- என ஏழாவது ஒத்த உரிமையோடு மயங்குதலும். |
| | ‘மூன்றனும் ஐந்தனும் தோன்றக் கூறிய ஆக்கமொடு புணர்ந்த ஏதுக் கிளவி நோக்கோ ரனைப என்மனார் புலவர்’ | 92 |
என்ற நூற்பாவால் வாணிகத்தான் ஆயினான் என்ற மூன்றாவதன் ஏதுப் பொருட்கண் வாணிகத்தின் ஆயினான் என்ற ஐந்தாவது மயங்குதலும், |
| | ‘இரண்டன் மருங்கின் நோக்குஅல் நோக்கம்அவ் விரண்டன் மருங்கின் ஏதுவும் ஆகும்’ | 93 |
என்ற நூற்பாவால் வானை நோக்கி வாழும் என்ற இரண்டாவதன் பொருட்கண் வானான் நோக்கி வாழும்- வானின் நோக்கி வாழும் - என்ற மூன்றாவதும் ஐந்தாவதும் மயங்குதலும், |
| | தடுமாறு தொழிற்பெயர்க்கு இரண்டும் மூன்றும் கடிநிலை யிலவே பொருள்வ யினான | 95 |
என்ற நூற்பாவால் ‘புலி கொன்ற யானை’ என்ற தொடர் புலியைக் கொன்ற யானை- புலியாற் கொல்லப்பட்ட யானை என இரண்டாவதனொடும் மூன்றாவதனொடும் மயங்குதலும். |