சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

240 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

தொல்காப்பியச் சொற்படல 89ஆம் நூற்பா உரையை நச்சினார்க்கினியர்
“முன்னக்கூறிய எல்லாம் பண்பும் தொகையிலும் பொருள்தொடர்ச்சியும் பற்றி வருதலும்
கொள்க” எனக்கூறி, மணியது நிறத்தைக் கெடுத்தான்- மணியை நிறத்தின்கண்
கெடுத்தான்- மணியை நிறத்தைக் கெடுத்தான்- எனவும், தலைமகனது செலவை
அழுங்குவித்தாள் தலைமகனைச் செலவின்கண் அழுங்குவித்தாள்- தலைமகனைச்
செலவை அழுங்குவித்தாள்- சாத்தனை நூலை ஓதுவித்தாள் யாற்றை நீரை
விலக்கினான்- எனவும் கூறியவற்றை இவ்வாசிரியரும் குறித்துள்ளவாறு காண்க.
 

ஒத்த நூற்பாக்கள்:
 

  ‘முதல்சினைக் கிளவிக்கும் அது என் வேற்றுமை
முதற்கண் வரினே சினைக்குஐ வருமே.’

தொல்.சொல்.87

  ‘முதல்முன் ஐவரின் கண்என் வேற்றுமை
சினைமுன் வருதல் தெள்ளிது என்ப.’

88

  ‘ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே.’

91

  ‘அதுவென்.............குகரம் வருமே.’

194

  ‘முதலை ஐ-உறின் சினையைக் கண்ணுறும்
அதுமுதற்கு ஆயின் சினைக்கு ஐ ஆகும்.’

நன்.375

  ‘முதற்குஆறு ஆயின் சினைக்குஇரண்டு ஆகும்.’

மு.வீ.பெ.71

  ‘மூன்றிற்கு ஓதிய ஒருவினை ஒடுச்சொல்
உயர்திணை உணர்த்தும் பெயர்வழித் தோன்றும்.’

73

  ‘உயர்திணை மருங்கின்நால் ஆறும்ஒத்து இயலும்.’

76


முதல்சினை, பிண்டம் பிண்டித்த பொருள்கள்-
இவற்றது இயல்பு
 

222. முதல்இவை சினைஇவை எனவேறு உளஇல
உரைப்போர் குறிப்பின் அற்றே பிண்டமும்.