சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

260 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இருவகை வினைமுதல்- செய்வது- முதல் வேற்றுமை. வினை, எய்தப்படுவது
முதலியன- செயப்படுபொருள் இரண்டாம் வேற்றுமை.

முதற்காரணம் முதலிய மூன்றும் ஐந்தாவதன் பொருளும் கருவி- மூன்றாம்
ஐந்தாம் வேற்றுமைகள்.

இன்னதற்கு, இதுபயன்- நான்காம் வேற்றுமை.

எனவே, செய்வது முதல் வேற்றுமையும், செயப்படு பொருள் வினை என்பன
இரண்டாம் வேற்றுமையும், கருவி மூன்றாம் வேற்றுமையும் ஐந்தாம் வேற்றுமையும்,
இன்னதற்கு இதுபயன் என்பன நான்காம் வேற்றுமையும், நிலனும் காலமும் ஏழாம்
வேற்றுமையும் பற்றி வருமாறு காண்க.

தொழில் நிகழ்ச்சிக்கு இவ்வெட்டும் வருதல் வேண்டா; செயப்படு பொருளும்,
இன்னதற்கு இதுபயன் என்பனவும் குன்றியும் வரலாம் என்பது.

இன்னதற்கு - இதுபயன் - என்பனவற்றின் சிறப்பின்மை நோக்கி நன்னூலார்,
 

  ‘செய்பவன் கருவி நிலம்செயல் காலம்
செய்பொருள் ஆறும் தருவது வினையே.’

நன்.320

இனி, வினை கொண்டு முடியும் வேற்றுமைஉருபு ஏற்ற சொற்கள் காரகம்
எனப்படும் என்பது முன்னும் குறிக்கப்பட்டது. காரகம் பற்றி வீரசோழியம் உரைப்பன
பின்வருமாறு.

ஆறாம் எட்டாம்வேற்றுமை நீங்கலான ஏனைய ஆறு வேற்றுமைகளும் காரகமாம்.
முதல் வேற்றுமைக்காரக வகை5, இரண்டாவது7, மூன்றாவது2, நான்காவது3, ஐந்தாவது2,
ஏழாவது4 ஆக ஆறு வேற்றுமைக் காரகங்களின் கூடுதல் 23 ஆகும்.