என்பதன் ஆண் பெண் பலர் என்பதன் வகை. ஐயம் அறுத்தல்- தெய்வம் பேடு என்பன உயர்திணைக்கு உரிய ஈற்றவாய் வந்து உயர்திணை வினைகளையும் கொண்டு முடியும் என்பது.பேடு பொதுப்பெயர்; அஃது அன்ஈறு பெற்றுப்பேடன் என்றாகி ஆண்பால் வினையும்,இகர ஈறு பெற்றுப்பேடி என்றாகிப் பெண்பால் வினையும் கொண்டு முடியும் என்பது;பேடர் என்பது பொதுப்பெயராய், பேடன் பேடி என்ற இரண்டன் பன்மையும் ஆம் என்பது இவர்கருத்து. நரகன் நரகி, நரகர் என்பனவும் அன்ன. அலி என்ற சொல் ஆண் பாலாகவும் மகண்மா என்பது பெண்பாலாகவும் கொள்ளப்படும். பேடு என்பது அஃறிணை முடிபு கோடலும், இவை தனித்தனியே, பலர்பால் ஈறு பெற்று ஆண்பன்மை பெண் பன்மை உணர்த்தலும் விளக்கப்பட்டன. | சூறாவளி | ஆண் அவாய்ப் பெண் இழந்ததற்கும் பெண்அவாய் ஆண் இழந்ததற்கும் முறையே பேடன்வந்தான் பேடி வந்தாள் என உதாரணம் காட்டி, அலி அவற்றின் வேறு எனக் கூறினார். அது பொருந்தாது; பெண் அவாய் ஆண் இழந்ததனைப் பேடி எனவும், ஆண் அவாய்ப்பெண் இழந்ததனை அலி எனவும், கூறுதலே மரபு ஆகலின். அது பேடன் வந்தான்- பேடிமார்- என உரையாசிரியரை உள்ளிட்டோர் காட்டாமையானும், அலிவந்தான் எனத்தாமும் காட்டாமையானும்,
| ‘பெண்அவாய் ஆண்இழந்தபேடி அணியாளோ’ நாலடி. 251 | எனவும். | ‘பேடிகை வாளாண்மை’ குறள் 614 எனவும் | ‘இன்பால் அடிசில் இவர்கின்ற கைப்பேடி’ சீவக. 443 எனவும், |
|
|
|