உரிஞின- உரிஞ்+இன்+அ- மெய்யீற்றுப் பகுதி இன் இடைநிலை பெற்றதற்கு எடுத்துக்காட்டு. பிறவும் அன்ன. |
| | போயன- போ+அன்+அ; அன்- இடைநிலை. போய- போ+ய்+அ;ய் இடைநிலை. போன- போ+ன்+அ; - னகர இடைநிலை. |
இவற்றால், க்- ட், த்- ற்-இன்- இ- ய- ன- ய்- ன்- என்பன இறந்தகாலம் காட்டும் என்ற கருத்தினர் இவ்வாசிரியராவர். |
| | உண்ணாநின்றன- உண்+ஆநின்று+அன்+அ; அன்சாரியை. உண்ணாநின்ற- உண்+ஆநின்று+அ; சாரியைஇன்று. பிறவும் அன்ன. உண்பன-உண்+ப்+அன்+அ; அன்-சாரியை உண்ப- உண்+ப்+அ; சாரியை இன்று. |
| |
| | பிறவும் அன்ன. உரிஞுவன- உரிஞ்+உ+வ்+அன்+அ; பகுதி உகரச்சாரியை பெற்றது உரிஞுவஎன்பதும் அது. உண்குவன- உண்+கு+வ்+அன்+அ;பகுதி குகரச்சாரியை பெற்றது. உண்குவ என்பதும் அது. |
உண்ணா-உண்+ஆ- பழக்கத்தால் ஆகார விகதி பெரும்பாலும் எதிர்காலத்துக்கண் எதிர்மறைப் பொருளில் வரும் என்பது. |
| |
| | குழையன, குழைய- பொருள் பற்றிய குறிப்புமுற்று. நிலத்தன, நிலத்த- இடம் பற்றிய குறிப்புமுற்று. மூவாட்டையன, மூவாட்டைய- காலம் பற்றிய குறிப்புமுற்று. வெண்கோட்டன, வெண்கோட்ட-சினை பற்றிய குறிப்புமுற்று. கரியன, கரிய- பண்பு பற்றிய குறிப்பு முற்று பற்றிய குறிப்புமுற்று. நடையன, நடைய- தொழில் பற்றிய குறிப்புமுற்று. |
| |