சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

296 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இவற்றில் ட், த், ற் என்பன கால இடைநிலை. இல் எதிர்மறை இடைநிலை.

உண்டிலன்- உண்+ட்+இல்+அன்- உண்டான் அல்லன் என்னும் பொருளது,

களைந்தன்றுமிலன், வியந்தன்றுமிலன், இழிந்தன்று மிலன்- என்பன களைந்திலன்,
வியந்திலன், இழிந்திலன் என்ற முற்றுவினைகள் செய்யுளுக்காவே
திரித்துக்கொள்ளப்பட்ட திரிசொற்களாம்.
 

  குழையது, குழையிற்று- பொருள் பற்றி வந்தன.
நிலத்தது, மேற்று- இடம் பற்றி வந்தன.
மூவாட்டையது, வைகற்று-காலம் பற்றி வந்தன.
வெண்கோட்டது, மருப்பிற்று-சினை பற்றி வந்தன.
கரிது, வடிவிற்று- குணம் பற்றி வந்தன.
நடைத்து, செலவிற்று- தொழில் பற்றி வந்தன.
 

இவை துவ்வீறும் றுவ்வீறும் பெற்றுப் பொருள் இடம் காலம் சினை குணம்
தொழில் பற்றி வந்த வினைக்குறிப்பு முற்றுக்கு எடுத்துக்காட்டுக்களாம்.

குண்டுகட்டு, குறுந்தாட்டு- சினை பற்றி வந்த டுவ்வீற்றுக் குறிப்பு முற்றுச்சொற்கு
எடுத்துக்காட்டுக்களாம்.
 

  தொக்கன- தொகு+ க்+அன்+அ.
தொக்க- தொகு+க்+அ.
 

முன்னது அன் சாரியை பெற்றதற்கும், பின்னது அச்சாரியை பெறாததற்கும்
எடுத்துக்காட்டு. பிறவும் அன்ன.

எஞசின- எஞ்சு+இன்+அ- குற்றியலுகர ஈற்றுப்பகுதி இன் இடைநிலை பெற்றதற்கு
எடுத்துக்காட்டு உரிஞின- உரிஞ்+இன்+அ- மெய்யீற்றுப் பகுதி இன் இடைநிலை
பெற்றதற்கு எடுத்துக்காட்டு. பிறவும் அன்ன.