சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-8299

என்ற நூற்பாவை உட்கொண்டு சொல்லப்பட்டன.

ஆசிரியர் உடன்பாட்டிற்கும் எதிர்மறைக்கும் பொதுவான ஈறு பற்றி ஓதினார்
ஆதலின், வினைமுற்றுக்களை உடன்பாடு எதிர்மறை இரண்டற்கும் கொள்ளல்
வேண்டும் என்பது கருதி, வந்திலது வந்தில என்பனவும் ஈண்டே காட்டினார்.
செய்திகள் பெரும்பான்மையும் சொல்லதிகார நச்சினார்க்கினியர் உரையை ஒட்டியே
வரையப்பட்டுள்ளன. (தொல்.சொல். 218, 219)
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘ஒன்றன் படர்க்கை தறட ஊர்ந்த
குன்றிய லுகரத்து இறுதி ஆகும்.’

தொல்.சொல். 217

  ‘அஆ வஎன வரூஉம் இறுதி
அப்பால் மூன்றே பலவற்றுப் படர்க்கை.’

216

 
  ‘இன்று இல உடைய....குறிப்பொடு கொள்ளும்.

220

  ‘ததுவும் அதுவும்.......தனவும் அனவும்
திகழ் படர்க்கை....ஆனா இறப்பில் தொழிற்பதம்.’

வீ.சோ. 73

  ‘நின்றதும் கின்றதுவும்.......நின்றன கின்றனவும்
....................திகழ்படர்க்கைப்
பின்தான் நிகழ்கைத் தொழிற்பதம் ஆறிற்கும் பேர்த்தறியே’.

74

  ‘வதுவும் பதுவும்........வனவும் பனவும் திகழ்படர்க்கை
வான்பான் மலியும் எதிர்வின் தொழிற்பதம்’

75

  ‘சொன்ன அஆவத் துடுறுவும் அஃறிணையின்
பன்மை ஒருமைப் படர்க்கையாம்.’

நே. சொல். 42

  ‘துறுடுக் குற்றிய லுகர ஈற்ற
ஒன்றன் படர்க்கைக் குறிப்பின் ஆகும்.’

நன்.328