வியங்கோள் ஈறுகள்- க, ய, ர், அல், ஆல், உம், மார், ஐ- என்ற எட்டும் இவர்கருத்து. ககரஈறு விதித்தல், வாழ்த்தல், வேண்டிக்கோடல் என்ற பொருட்கண் வரும். யகர ஈறும் ரகர ஒற்றீறும் வாழ்த்துதற் பொருண்மைக் கண் வரும். அல்ஈறும் ஆல்ஈறும் விதித்தற் பொருண்மைக் கண்ணும், உம் ஈறும் மார்ஈறும் வாழ்த்துதற் பொருண்மைக் கண்ணும் ஐகார ஈறு விதித்தற் பொருண்மைக்கண்ணும் வரும். இவற்றுள் அல்ஈறு விதித்தற் பொருண்மைக்கண் உடன்பாடு எதிர்மறை என்ற இருபொருண்மைக்கண்ணும் வரும். வியங்கோளில் இருவகை உண்டு; ஏவல்கண்ணிய வியங்கோள், ஏவல் கண்ணாத வியங்கோள் என. |