‘யாவரும் கேட்க’ எனவும் வேண்டிக் கோடல் பொருண்மைக்கண்ணும் அகரத் தொடி கூடிய ககர ஈறும், அவன்வாழிய- அவள்வாழிய- அவர்வாழிய- அதுவாழிய- அவைவாழிய |
| ‘யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய’ புறம். ‘மன்னிய பெருமநீ நிலம்மிசை யானே’ புறம். | 175 6 |
என வாழ்த்துதல் பொருண்மைக்கண் அகரத்தொடு கூடிய யகர ஈறும், |
| வாழியர்- நடுக்கின்றி நிலீஇயரோ அத்தை’ புறம். நீவாழியர் நின் தந்தை தாய் வாழியர் புறம். | 2 137 |
என வாழ்த்துதல் பொருண்மைக்கண் ரகர ஈறும், |
| ‘வழாஅல் ஓம்பல் ‘இற்றெனக்கிளத்தல்’ ‘ஆக்கமொடு கூறல்’ | (தொல்.சொல்.13) (19) (20) |
என அல் ஈறும். மரீஇயது ஒராஅல் (தொல்.சொல்.443) என ஆல் ஈறும் விதித்தற்கண்ணும், |
| பாடுஇல் மன்னரைப் பாடன்மார் எமரே’ புறம். ‘நோய்மலி வருத்தம் காணன்மார் எமரே’ நற். | 375 64 |
என மார் ஈறும் வாழ்த்துதற் பொருண்மைக்கண்ணும், |
| ‘அஞ்சாமை அஞ்சுவது ஒன்றின்’ | |
என விதித்தற்கண் ஐகார ஈறும் வந்தன. |
| ‘பயன்இல் சொல் பாராட்டு வானை மகன் எனல் மக்கள் பதடி எனல்’ | குறள்.196 |
என அல்ஈறு விதித்தற்கண் மறையும் உடம்பாடுமாய் வருதலும் கொள்க. |
| ‘நாடாக ஒன்றோ நாடாக ஒன்றோ அவலாக ஒன்றோ மிசையாக ஒன்றோ’ | புறம்.187 |