இது வியங்கோள் முற்று உணர்த்துகின்றது. இ-ள்: அகர உயிரொடு கூடிய ககரயகரங்களும் ரகர ஒற்றும் அல்லும் ஆலும் உம்மும் மாரும் ஐயும்ஆகிய எண்வகை விகுதியையும் ஈறாக உடைய சொற்கள் வியங்கோள் தெரிநிலை வினைமுற்றுச் சொற்களாம். அம்முற்றுச் சொற்கள் ஐம்பால் மூவிடங்களிலும் செல்லும் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. வரலாறு: அவன்செல்க- அவள்செல்க- அவர்செல்க- அதுசெல்க- அவைசெல்க- என உயர்ந்தான் இழிந்தானை இன்னது செய்து என விதித்தல் பொருண்மைக்கண்ணும், அவன்வாழ்க- அவள்வாழ்க- அவர்வாழ்க- அதுவாழ்க- அவை வாழ்க எனவும், |