என்ற சொல் கூறி, இல்லை- இல்- என்ற இரு சொற்களையும் கொண்டார் இவர். தொல்காப்பியனார் காலத்தில் உண்டு என்பது ஒன்றன்பால் குறிப்பு வினையாதலின் அவர் பொது வினைகளைச்சுட்டும் ‘முன்னிலை வியங்கோள்’ (தொல்.சொல். 222) என்ற நூற்பாவில், வேறு இன்மைசெப்பல் என்பன வற்றைச் சுட்டினாற்போல, உண்டு என்பதனையும் உடன் சுட்டவில்லை. ‘யாரும் இல்லை தானே களவன்’ என்ற குறுந்தொகைப் பாடலுள் (25) ‘கால குருகு’ என்பது ‘மாடமது வார்சடைய வள்ளலையும் ஒக்கும்’ (சிவ.598) என்புழி ‘வார்சடைய வள்ளல்’ என்பது போலப் பன்மை ஒருமை மயக்க மாகவே கொள்ளப்படல் வேண்டும் என்பதனை இடம் சுட்டி விளக்கியுள்ளார். தொல்காப்பியனாருக்குச் சற்றுப் பிற்பட்டவரான இளங்கோவடிகள் காலத்திலேயே, உண்டு என்பது பொதுவினை யாயினமையால், நன்னூலார் முதலாயினார் உண்டு என்பதனையும் பொதுவினையுள் அடக்குவாராயினர்.இப்பொது வினைகளுள் யார் என்பதையும், வேண்டும்- தகும்- படும்- என்பனவற்றையும் இலக்கணக்கொத்து நூலார் அடக்கியுள்ளமை உளங்கொளத்தக்கது. (இ.கொ.85) |