சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

328 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘எஞ்சிய கிளவி இடத்தொடு சிவணி
ஐம்பாற்கும் உரிய தோன்ற லாறே’,

‘வேறில்லை உண்டு வியங்கோளும்- தேறும்
இடமூன்றோ டெய்தி இருதிணைஐம் பாலும்
உடனொன்றிச் சேறலும் உண்டு.’

‘வேறுஇல்லை உண்டுஐம் பால்மூ விடத்தன.’

‘வேறுஇல்லை உண்டுயார் வேண்டும் தகும்படும்
வினைபெயர் எச்சம் வியங்கோள் பத்தும்
திணைபால் இடமெலாம் செல்லும் என்ப.’

‘முன்னிலை ஒழியமற்ற ஏனைய எல்லாம்
ஐம்பால் மூவிடத் தொடுநிலை பெறுமே.’
 


தொல்.சொல்.225



நே.சொல். 45
நன். 339



இ.கொ.85



மு.வீ.வி.26
 

செய்யும் என்னும் முற்று
 

241 பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையில்
செல்லாது ஆகும் செய்யும்என் முற்றே.
 
 

இது செய்யும் என்னும் முற்றுச்சொற்குப் பால்இட உரிமை கூறுகின்றது.

இ-ள்: பல்லோர் படர்க்கைக் கண்ணும் முன்னிலைக் கண்ணும் தன்மைக்கண்ணும்
பொருந்தாது; ஒருவன் படர்க்கைக்கண்ணும்; ஒருத்திபடர்க்கைக்கண்ணும் ஒன்றன்
படர்க்கைக்கண்ணும் பலவற்றின் படர்க்கைக்கண்ணும் பொருந்தும் செய்யும் என்னும்
சொல் என்றவாறு.

எ-டு: அவன் வரும்- அவள் வரும்- அதுவரும்- அவை வரும்- எனவரும். 15