தொல்காப்பியனார் உம் ஈறு நிகழ்காலமும் எதிர்காலமும் காட்டும் என்றார். இவர் நிகழ்காலத்துக்குக் கின்ற என்ற ஈறு கொண்டார். பெயரெச்சம் மூன்று காலத்தும் இருதிணை ஐம்பால் மூவிடத்தின்கண்ணும் வருதலை விளக்கி, வினையெச்சத்திற்குச் செய்து என்ற இறந்தகால வாய்பாட்டு எடுத்துக்காடடுக்களே தந்துள்ளார், ஏனைய விரிநூற்பாக்களான் விளக்கப்படுதல் கருதி. இதனால் எதிர்காலத்திற்கு உரிய செய்யும் என்னும் பெயரெச்சம் இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் உரியதாதல் பெறப்படும். |