சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

332 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘தொழிலும் காலமும் தோன்றிப் பால்வினை
ஒழிய நிற்பது வினையெச் சம்மே.’

‘வினைபெய ரெச்சம்
தத்தம்எச் சத்தொடு சார்ந்துநின்று இயலும்’
 


நன். 342


மு.வீ.ஒ.108
 

பெயரெச்சம் - சிறப்புவிதி
 

243 அவற்றுள்,
செய்த செய்கின்ற செய்யும்என் பாட்டின்
செய்வது ஆதி அறுபொருட் பெயரொடும்
முடியும் முறையது பெயரெச் சம்மே.
 
 

இது, பெயரெச்சத்திற்கு எய்தியதன் மேல் சிறப்புவிதி கூறுகின்றது, இத்துணை
வாய்பாட்டான் நிகமும் எனவும் இத்துணைப் பொருட்பகுதி பற்றி வரும் பெயர்களான்
முடியும் எனவும் கூறுகின்றமையின்.

இ-ள்: முற்கூறிய எச்சங்கள் இரண்டனுள் செய்த- செய்கின்ற- செய்யும்- என்னும்
முறையே முக்காலமும் காட்டும் வாய்பாட்டான் புலப்பட்டுத் தொழில்முதல்நிலை
எட்டனுள் இன்னதற்காக- இது பயனாக- என்னும் இரண்டும் ஒழித்து வினைமுதல்
முதலாயின ஏனை அறுவகைப் பொருள்களையும் உணர்த்தும் பெயர்களொடுமுடியும்
இயல்பினை உடையது பெயரெச்ச வினைச்சொல்லாம் என்றவாறு.

வரலாறு: ஆடிய கூத்தன்- வென்றவேல்- புக்க இல் போயின போக்கு- வந்தநாள்-
உண்டசோறு- எனவும், ஆடுகின்ற கூத்தன்- வெல்கின்றவேல்- புகுகின்றஇல்- போகின்ற
போக்கு- வருகின்ற நாள்- உண்கின்ற சோறு- எனவும், ஓதும் பார்ப்பான்-
வனையுங்கோல்- வாழும்இல்- உண்ணும்ஊண்- துயிலுங்காலம்- கற்கும் நூல்- எனவும்
வினைமுதல்பொருளும் கருவிப்பொருளும் நிலப்பொருளும்