என இறந்த காலம் பற்றிவரும். உரிஞுபு என உகரமும், கற்குபு எனக் குகரமும் ஏற்றவழிப் பெறுதல் கொள்க.என-என்பது சோலைபுக்கென வெப்பம் நீங்கிற்று- உண்டெனப் பசிகெட்டது- உரைத்தென உணர்ந்தான்- மருந்து தின்றெனப் பிணிநீங்கிற்று- என முடிக்கும் சொல்லான் உணரப்படும் தொழிற்குத் தன்முதல்நிலைத் தொழில் காரணமாய் விரைவு உணர்த்திக் கடதறக்களை ஊர்ந்து இறந்தகாலம் பற்றிவரும். ளஞ்சியென- உரிஞியென- என ஏனை எழுத்தோடும் வருமாறு அறிந்து ஒட்டிக்கொள்க. அகரம்- ஞாயிறுபடவந்தான் என, இது நிகழாநிற்க வந்தான் எனும் பொருட்டாய் நிகழ்காலம் பற்றிவரும். வாழச் செய்த நல்வினை என்பதூஉம் அது. இன்- மழைபெய்யின் குளம் நிறையும்-மெய்உணரின் வீடு எளிதாம்- எனக் காரணப்பொருட்டாய் எதிர்காலம் பற்றிவரும். நடப்பின்- உரைப்பின்- என ஏற்றவழிப் பகரம் பெற்று வருதலும் கொள்க. இய, இயர்- என்பன உண்ணிய- தின்னிய- உண்ணியர்- தின்னியர்- என எதிர்காலம் பற்றி வரும். போகிய- போகியர் என ஏற்றவழிக் குகரம் பெற்று வருதலும் கொள்க. வான்பான்- பாக்கு- என்பன முறையே, |