சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-20349

செயற்கு என்னும் எச்சப்பொருள் தரும்மயக்கம் இன்மையும், உணல் என்னும் வினைப்பெயர் குகரம் அடுத்துழி உண்டலைச் செய்தற்கு என்னும் பொருள்தந்து எச்சப்பொருட்டாயே நிற்றலின் வினைப்பெயர் நான்கன் உருபு ஏற்று நின்றது என்னும் மயக்கம் உணற்கு என்பதற்கு இன்மையும் உணர்க. எற்றுக்கு வந்தான் என்பது என்னகாரியம் செய்தற்கு வந்தான் என்னும் பொருட்டாய் அவ்வெச்சவினைக்குறிப்பாய் நிற்கும். எவற்றுக்கு என்பதும் அது. இவையும் ‘இன்ன’ என்பதனால் கொள்க.

பின் முதலிய ஆறனையும் காலம் பற்றிவரும் என்றது- கூதிர் போயபின் வந்தான்
எனவும் நின்றவிடத்து நின்றான் எனவும் பின் முதலாயின பெயரெச்சத்தொடு
வந்துழிக்காலம் பற்றாமையின் என்று உணர்க. இவற்றைச் செய்த என்னும் காலம் பற்றிய
இடப்பொருள் உருபாய் அடங்கும் என்னாமோ எனின் என்னாம் வினை வேற்றுமை
உருபு ஏலாமையின்.

இனிப் ‘பிற’ என்றதனானே உகரம் கடதறக்களை ஊர்ந்து இயல்பாய் நிற்றலேயன்றி,
எஞ்சி- உரிஞி-ஓடி எனவும், ஆய்-போய்- எனவும், ஏனை எழுத்துக்களை ஊர்ந்து
இகரமாய்த்திரிந்தும் நெட்டெழுத்து ஈற்றின் முதல்நிலை முன்னர் யகரம் வரத் தான்
கெட்டும் இறந்தகாலம்பற்றி வரும் எனக் கொள்க.

சினைஇ- உரைஇ- இரீஇ- உடீஇ- பாஅய்- தாஅய் ஆஅய்- என்பனவோ எனின்,
அவை செய்யுள் முடிபு என்க.

ஆகி போகி- ஓடி- மலர்த்தி- ஆற்றி- என்புழி முதல்நிலை குற்றுகர ஈறு ஆதலின்
ஏனை எழுத்தாதல் அறிக. கடதற என்பன குற்றுகரத்தொடு வரும் இடமும் தனிமெய்யாய்
வரும் இடமும் தெரிந்து உணர்க.

உரிஞி- ஓடி- என்பனவற்றை இகர ஈறு எனவும், ஆய்- போய்- என்பனவற்றை
யகர ஈறு எனவும்