கொள்ளாது உகர ஈற்றின் திரிபு என்றது கடதறக்களை ஊர்ந்து உகரஈறு வினைக்கண் பயின்று வருதலானும், எதிர்மறை எச்சம் எல்லாம் பெரும்பான்மையும் உகர ஈறாம் அல்லது வாராமையானும், அவ்விகர யகர ஈறுகளும் செய்து என்னும் வாசகத்தைத் தந்தே நிற்றலானும், உகரம் இயல்பாக, இகரமும் யகரமும் அதன் திரிபு என்றலே முறைமையாம் என்று உணர்தற்கு எனக் கொள்க.இன்னும் அதனானே ஓடாநின்று போயினான் எனவும், | | ‘அகல்இரு விசும்பின் பாய்இருள் பருகிப் பகல்கான்று எழுதரும் பல்கதிர்ப் பருதி’ |
பெரும்பாண். 1,2 | எனவும் | | ‘தளிபெறு தண்புலத்துத் தலைப்பெயற்கு அரும்பு ஈன்று முளிமுதல் பொதுளிய முட்புறப் பிடவமும்’ |
கலி.101 | எனவும், உகரஈறு சிறுபான்மை நிகழ்காலம் பற்றி வருதலும், புகரஈறு-நகுபு வந்தான் என்புழி நகாநின்று வந்தான் என்றும், | | ‘வாடுபு வனப்பு ஓடி’ | கலி-16 | என்புழி வாடாநின்று வனப்பு ஓடி என்றும், முடிக்கும் சொல்லான் உணரப்படும் தொழிலொடு உடன்நிகழ்ந்து நிகழ்காலம் பற்றி வருதலும், அகரஈறு மழைபெய்யக் குளம் நிறைந்தது எனக் காரணப்பொருட்டாயும் குளம் நிறைய மழை பெய்தது எனக்காரியப் பொருட்டாயும் இறந்தகாலம் பற்றியும் உண்ண வந்தான் எனத் தன்பொருட்டாய் எதிர்காலம் பற்றியும், வருதலும், | | ‘தலைவன் பிரிந்து வருந்தினாள்’ ‘மாஅல் யானையொடு மறவர் மயங்கித்’ தூறுஅதர்ப்பட்ட ஆறுமயங்கு அருஞ்சுரம்’ |
கலி. 35 |
|
|
|