‘வான்நின்று உலகம் வழங்கி வருதலான்’ குறள்-11 எனவும், ‘நமது நலன் நுகர்வான் யாம் விரும்புதும்’ ‘கற்பான் நூல் செய்தான்’ ‘புணர்தரு செல்வம் தருபாக்கு யாம் விரும்புதும்’ எனவும் உரகஈறாயும் வாள் பான் பாக்கு ஈறாயும் திரிதலும் கொள்க. உரைப்ப- உரைக்க- என இதற்கு ஏற்புழிப் பகரமும் ககரமும் வரும். இது மறைக்கண், ‘கூறாமல் குறித்ததன்மேல் செல்லும் கடுங்கூளி, கலி.கடவுள் வாழ்த்து என அல் ஈறாயும், ‘கூறாமை நோக்கிக் குறிப்பு அறிவான்’ குறள்-701 என மகர ஐகார ஈறாயும் வருதலும், இன் ஈறு ‘நனவின் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே’ கலி.39 என உம் ஈறாயும், ‘அற்றால் அளவு அறிந் உண்க’ குறள்- 943 என ஆல் ஈறாயும் திரிதலும் கொள்க. அகர ஈறும் இன்ஈறும் இயல்பு ஆதற்கும், உகரஈறும் வான்-பான்- பாக்கு ஈறும் உம்ஈறும் ஆல்ஈறும் அவற்றின் திரிபு ஆதற்கும் மேல் உகர ஈற்றிற்கு உரைத்தாங்கு உரைக்க. இன்னும் அதனானே, ஓடிவந்தான்- விரைந்து போயினான்- எனவும், ‘வெய்ய சிறிய மிழற்றும் செவ்வாய்’ எனவும் ‘செவ்வன் தெரிகிற்பான்’ நச்.எழு.பாயி |