தொறு என்பதும் தோறு என்பதும் தாம் சார்ந்த மொழிக்குப் பன்மையும் இடமும் உணர்த்துதலை நச்சினார்க்கினியர் தொல்.சொல்.298. இல் சுட்டியுள்ளார். ஆ என்பது வியப்பு உள்வழியும் மறுத்தல் உள்வழியும் பொருள் உணர்த்துதலை தொல்.சொல். 298-உரையிலும் அஃது இரக்கக் குறிப்பாய் வருதலைச் சிந்தாமணி 1804 ஆம் செய்யுள் உரையிலும் அவர் குறிப்பிட்டுள்ளார்; தொல். சொல். 284- உரையிலும் குறித்துள்ளார். என என்எச்சம் விரைவு பெருக்கம் என்ற பொருள்களின் வருதலும் அவர் 298இல் குறித்தனவே. |