சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

இடைச்சொல்இயல்-நூற்பா-29439

மேல் எழுத்தோத்தினுள் கூறிய அக்கொற்றன்- அவன் முதலியனவும், ஆங்கு,
ஈங்கு- என அவை நீண்டு வந்தன யாவன்- எப்பொருள்- உண்கா- எவன்- என்பனவும்,
முறையே சுடடுப் பொருளும் வினாப் பொருளும் உணர்த்தி நிற்றலும், ஆன்- ஏன்-
ஓன்- இத்தொடக்கத்து எழுத்துச் சாரியையும், எடுத்து ஓதாதன பிறவும் கொள்க.

இனி ஆர் என்னும் இடைச்சொல்.
 

  ‘பெயரின் ஆகிய தொகையுமார் உளவே’

தொல்.சொல்.67

என-உம்மை முன்னரும்,
 
  ‘எல்லா உயிரொடும் சொல்லுமார் முதலே’

தொல்.61

என-உம் ஈற்று வினை முன்னரும், அசைநிலையாய் வருதலும்,
 
  ‘மலைநிலம் பூவே துலாக்கோல் என்றின்னர்’

தொல்.எழு பாயி.

எனவும்,
 
  ‘தோற்றம் இசையே நாற்றம் சுவையே
உறலோடு ஆங்குஐம் புலன்என மொழிப’

 
எனவும்,

சொல்தொறும் வாராது எண் ஏகாரம் இடையிட்டு வரினும் எண்ணும் பொருட்டு
ஆதலும்,

சாத்தனும் வந்தான்; கொற்றன் இனி வரலும் உரியன் என, எச்சஉம்மை நின்றவழி
எஞ்சு பொருட்கிளவியாம் எதிர்மறை உம்மைத்தொடர் வந்து தம்முள் மயங்குதல்
எனவும்,
 

  ‘பாட்டும் கோட்டியும் அறியாப் பயமில்
தேக்கு மரம்போல் நீடிய ஒருவன்’

 

எனவும்,