சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

438 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

‘ஒள அவன் முயலுமாறு’ ‘ஒள இனித்தட்டுப் புடையல் எனவும் முறையே
அதுதான் அளபு எடுத்தலும் அளபு எடாது வந்த வழியும் சிறப்பும் மாறுபாடும்
புலப்படுத்தலும்,

இனி ஓகாரமும்,
 

  ‘ஓஒ ஒருவன் தவம் செய்தவாறு’
‘ஓஒ இனிச்சாலும்’
‘ஓஒ ஒருவன் இரவலர்க்கு ஈந்தவாறு’
‘ஓஒ இனி வெகுளல்’

 

எனவும்,
 

  ‘ஓ அவன் முயலுமாறு’
‘ஓ இனித் தட்டுப் புடையல்’

 

எனவும், முறையே பிரிவுஇல் அசைநிலையாயும் அளபெடுத்தும் அளபு எடாதும்
வந்தவழியும் அங்ஙனம் பொருள் புலப்படுத்தலும் அவை பிற பொருள் படுமாறும்,

ஒருவன் ஒன்று உரைத்தவழி ‘நன்றே நன்றே’ ‘அன்றே அன்றே என அடுக்கி
அதற்கு ஒவ்வாமைக்குறிப்பு உணர்த்தலும், அன்றே என்பது அடுக்காது ‘அவன்
அன்றே’ என் நின்றவழித் தெளிவு முதலாகிய பிற பொருளும்படுதலும்,

அந்தோ அன்னோ என்பன அடுக்கியும் அடுக்காதும் இரங்கல்குறிப்பு
உணர்த்தலும்,

அதோ அதோ- அச்சோ- அச்சோ- ஒக்கும்- ஒக்கும் என்பன இரங்கல் குறிப்பு
உணர்த்தலும்,
 

  ‘அன்னா அலமரும் ஆருயிரும்’

,

என அன்னா இரங்கல் குறிப்பு உணர்த்தலும்,
 
  ‘அஆ- இழந்தான்என்று எண்ணப்படும்’

நாலடி.9

என்பதூஉம் அப்பொருள் படுதலும்,