கிளந்தவற்றையும் இன்ன என்று அறிவது வழக்கினுள் சார்பும் இடமும் குறிப்பும் பற்றிஅன்றே? அதனால் கிளவாதவற்றையும் அவ்வாறு சார்பும் இடமும் குறிப்பும் பற்றி இஃது அசைநிலை இஃது இசைநிறை இது குறிப்பான் இன்னபொருள் உணர்த்தும் என்று ஆணையான் அன்றி உணர்ந்து கொள்க என்பார். |
| ‘கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே’ | |
என்றார். |
| ‘குன்றுதொறு ஆடலும் நின்றதன் பண்பே’ | முருகு.217 |
எனத் தொறு- தான்சார்ந்த மொழிப் பொருட்குப் பன்மையும் இடமும் உணர்த்தி நிற்றலும், அதுதான். |
| ‘நாடோறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடோறும் நாடு கெடும்’ | குறள்.553 |
என நீண்டும் நிற்றலும், ஆ என்பது வியப்பு உள்வழியும் மறுத்தல் உள்வழியும், |
| ‘ஆஅம்மா அம்மா’ | சீவக.1804 |
என இரக்கம் உள்வழியும் பொருள் உணர்த்தலும், பொள்ளென- பொம்மென- கதுமென என்பன போல்வன விரைவும், கொம்மென- என்பது பெருக்கம் என்னும் குறிப்பும் முறையே உணர்த்தலும்,‘ஒளஒள ஒருவன் தவம் செய்தவாறு’ என்றவழியும் ஒரு தொழில் செய்வானை ‘ஒளஒள இனிச்சாலும்’ என்ற வழியும் ஒளகாரம் பிரிவுஇல் அசையாய்ச் சொல்லுவான் குறிப்பிற்குத்தகும் ஓசை வேறுபாட்டான் முறையே சிறப்பும் மாறுபாடும் புலப்படுத்தலும், |
| ‘ஒளஉ ஒருவன் இரவலர்க்கு ஈந்தவாறு’ ‘ஒளஉஇனி வெகுளல்’ | |
எனவும், |