சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

436 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

குறிப்பிடவும், இவர் அதனைச் சிறப்புப் பொருளில் வருவது என்றார். இது நச்சினார்க்கினியர் கருத்து. பற்று என்ற பொருளில் தஞ்சம் வருதலையும் நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளார்.
 

  ‘ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை
ஆயிரண்டு ஆகும் இயற்கைய என்ப’

தொல்.சொல்.272

என்பதனை உட்கொண்டு குரை- இசைநிறையும் அசைநிலையும் ஆகும் என்றார்.

இன் அசைநிலையாதலும் நச்சினார்க்கினியர் சொற்றதே.
 

  ‘ஏஏ இவள்ஒருத்தி பேடியோ என்றார்’

 

என்பதன்கண் ஏஏ என்பது இசைநிறை என்றார் மயிலைநாதர் (421). இவர் அதனை
மறுத்து நச்சினார்க்கினியர் உரையை யொட்டி அஃது இழி பொருண்மைக்கண் வந்தது
என்றார். (284) பெயரினும் வினையினும் என்பதே முறையாயினும், ‘வினையாயினும்
பெயரினும் நினையத் தோன்றி’ என்பதன் கண் தோன்றும் பொழிப்பு எதுகை நயம்
நோக்கி மாற்றிக் கூறினார்.
 

ஒத்த நூற்பா
 

  முழுதும்

தொல்.சொல். 295


இடைச்சொற் பற்றிய புறனடை
 

279. கிளந்த அல்ல அன்ன பிறவும்
கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே.

 


இது சொல்பற்றி வருவதுஒரு புறனடை கூறுகின்றது.

இ-ள்: மேல் சொல்லப்பட்டன அன்றி அவை போல்வன வரினும், அவற்றையும்
கிளந்த சொல்லின் இயல்பான் உணர்ந்து கொள்க. என்றவாறு.