என்ற நூற்பாவின் கருத்தை ஒட்டி ஏகாரம் அடுக்கி வந்து இசைநிறையும் அசைநிலையும் ஆகியவாறு குறிப்பிடப்பட்டது. |
| ‘அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே யானே, தோடார் எவ்வளை நெகிழ ஏங்கி............’ | (குறுந்.216) |
எனச் செய்யுள் இடையே ஏகாரம் சொல்லின் ஈற்றில் அசையாயினவாறு சுட்டப்பட்டுள்ளது. |
| ‘ஈற்றுநின்ற இசைக்கும் ஏஎன் இறுதி, கூற்றுவயின் ஓர் அளபு ஆதலும் உரித்தே’ | (தொல்.சொல். 286) |
என்பதனை உட்கொண்டு, ‘காடிறந்தோரே’ என்பதன் கண் ஈற்றசை ஏகாரம் ஒரு மாத்திரை ஒலியது ஆகும் என்பது விளக்கப்பட்டுள்ளது. நச்சினார்க்கினியர் தனக்குரிய இரண்டு மாத்திரையே அன்றிப் பின்னரும் ஒரு மாத்திரை உண்டாய் வருதலும் உரித்து எனக் கூறிக் ‘காடிறந்தோரேஎ’ என்று குறிப்பிட்டுள்ளார். (சொல்.288) |
| ‘மாறுகோள் எச்சமும் வினாவும் ஐயமும் கூறிய வல்லெழுத்து இயற்கை யாகும்’ | (தொல்.290) |
என்ற நூற்பாவில் தொல்காப்பியனார் ஓகாரம் ஐயப்பொருட்கண் வருதலை நேர்ந்தார் ஆதலின், ஐயப்பொருட்கண் வரும் ஓகாரமும், அந்நூற்பா உரையில் ‘கூறிய’ என்ற மிகையான் ஓகாரம் எண்ணுப் பொருட்கண் வருதலை நச்சினார்க்கினியர் நேர்ந்தார் ஆதலின் அதனானே எண்ணுப் பொருட்கண் வரும் ஓகாரமும் இவ்வாசிரியர் கொண்டுள்ளமை தெளிக. |
| ‘ஊர் எனப்படுவது உறையூர்’ | |
என்ற தொடரில் என என்பது பெயர்ப்பொருளில் வரும் என்று மயிலைநாதர் (நன்-423) |