| ‘கலக் கொண்டன கள்என்கோ காழ்கொற்றன் சூடுஎன்கோ’ | |
என எண்ணுதற்கண்ணும், என என்பது ‘ஊர் எனப்படுவது உறையூர்’ எனச் சிறப்பின் கண்ணும் வருதலும், தஞ்சக்கிளவி ‘அவர் நமக்குத் தஞ்சம் அல்லர்’ எனப் பற்று அல்லர் என வருதலும்,குரை- என்னும் இடைச்சொல் அசைநிலை ஆதலே அன்றி |
| ‘அளிதோ தானேஅது பெறல்அருங் குரைத்தே’ | புறம்.5 |
என இசைநிறை ஆதலும், |
| இன்-சாரியை ஆதலே அன்றி ‘காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின்’ | தொல்.சொல்.72 |
என அசைநிலையாதலும், அவ்வாறு பிறவாற்றான் திரிந்து வருவன உளவேல் அவையும் ஈண்டே அமைத்துக் கொள்க. |
| ‘ஏஏ இவன்ஒருத்தி பேடியோ என்றார்’ | சீவக.652 |
என்பதனை இசைநிறை என்பாரும் உளர்; பொருள் உணர்த்தி நிற்றலின் அங்ஙனம் ஆகாமை அறிக. செய்யுள் இன்பம் நோக்கி ‘வினையினும் பெயரினும்’ என்றார். |
விளக்கம் |
உரைச்செய்தி பெரும்பான்மையும் நச்சினார்க்கினியர் உரைத்தனவே. (சொல்.297) |
| ‘ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை ஆயிரண் டாகும் இயற்கைய என்ப’ | (தொல்.சொல்.272) |