இது முன்னர்க் கூறிய வற்றிற்குப் பொருள்பற்றி வருவது ஒரு புறனடை கூறுகின்றது. இ-ள்: மேல் கூறப்பட்ட இடைச்சொற்கள் ‘அவ்வச் சொல்லிற்கு அவைஅவை பொருள்’ என நிலைபெறச் சொல்லபட்ட இயல்பை உடைய ஆயினும், வினையொடும் பெயரொடும் ஆராய்ந்து உணரத் தோன்றி வேறு பொருளவாயும் அசைநிலையாயும் இசைநிறையாயும் திரிந்து வரினும் ஆராய்ந்து கொள்க என்றவாறு. எனவே, கூறிய முறையான் வருதலே பெரும்பான்மை என்றும், வேறுபடவருதல் சிறுபான்மை என்றும் சொல்லியவாறாம். ‘வினையொடும் பெயரொடும்’ என்றது அவை வேறு பொருள என்று உணர்தற்குச் சார்பு கூறியவாறு. ஏகார இடைச்சொல், |