சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

432 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘யாகா-
பிறபிறக்கு அரோபோ மாதென வரூஉம்
ஆயேழ் சொல்லும் அசைநிலைக் கிளவி.’

தொல்.சொல். 279


 
  ‘இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும்
தகுநிலை உடைய என்மனார் புலவர்.’

275

  ‘ஒப்பில் போலியும் அப்பொருட் டாகும்.’

 


 
  ‘ஆக ஆகல் என்பது என்னும்
ஆவயின் மூன்றும் பிரிவில் அசைநிலை’.

280

  முழுதும்

நன். 441

  ‘இகுஞ்சினும் ஏனை இடத்தொடும் சிவணும்.’

மு.வீ.ஒ.22

  ‘ஒப்பில் போலியும் அப்பொருட் டாகும்.’

23

  ‘யாகா பிறபிறக்கு அரோபோ மாதென
வரும்ஒரு ஏழும் அசைநிலை மொழியே’.

24


 
  ‘ஆக ஆகல் பிரிவில் அசைநிலை.’

25


 
  ‘அத்து அந்தில் அன்றுஅம்ம ஆங்குஅரோஆம்
ஆல்இட்டு இகும்குரை காஇருந்து இன்றுஓரும்
சின்தாம் தான்நின்று தில்பிற பிறக்கு
மன்மா மன்னோ மாதுயா மாதோ
போலும் போம்எனப் பொதுஅசை முப்பதே.’

தொ.வி.137


இடைச்சொற் பொருள்பற்றிய புறனடை
 

278. அவ்வச் சொல்லிற்கு அவை அவை பொருள்என
மெய்பெறக் கிளந்த இயல ஆயினும்
வினையினும் பெயரினும் நினையத் தோன்றித்
திரிந்துவேறு படினும் தெரிந்தனர் கொளலே.