எனப்போல்வதும் சிறுபான்மை அசைநிலை ஆதலும், ஒருவன் யான் இன்னேன் என்றானும் நீ இன்னை என்றாலும் அவன் இன்னன் என்றானும் கூறியவழிக் கேட்டான் ‘ஆகஆக’-ஆகல் ஆகல் என்னும்; இவை உடன்படாமைக் கண்ணும், ஆதரம் இல்வழியும், ஒருவன் ஒன்று உரைப்பக் கேட்டான் ‘என்பது என்பது’ என்னும்; அதுநன்கு உரைத்தற் கண்ணும், பிறாண்டும் தனித்து நில்லாது இரட்டித்துப் பிரிவு இல் அசைநிலை ஆதலும் கொள்க. இன்னும் அதனானே, போலும்-போல்வது- என்பன உரையசைக்கண்ண எனவும் கொள்க. 27 |