சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

430 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘விளிந்தன்று மாதுஅவர்த் தெளிந்தஎன் நெஞ்சே’

 

என-மாதும்,
 
  ‘கண்டிகும் அல்லமோ கொண்க நின்கேளே’

ஐங்குறு. 121-28

என-இகுமும்,
 
  ‘கண்ணும் படுமோ என்றிசின் யானே’

நற்.61

என-சின்னும்,
 
  ‘பல்குரைத் துன்பங்கள் சென்று படும்’

குறள்-1045

என- குரையும்,
 
  ‘அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா’

குறள். 366

 என-ஓருமும்,
 
  ‘மங்கலம் என்பதோர் ஊர்உண்டு போலும்’
‘ஓராற்றான் என்கண் இமைபொருந்த அந்நிலையே
கூரார்வேல் மாறன்என் கைப்பற்ற-ஓரா
நனவுஎன்று எழுந்திருந்தேன நல்வினை ஒன்றில்லேன்
கனவும்ஒழிந்து இழந்த ஆறு’

முத்தொள்ளாயிரம்

என-இருந்தும்,
 
  ‘நெஞ்சம் பிளந்திட்டு நேரார் நடுவண்தன்
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்’

கலி.101

என-இட்டும்,
 
  ‘தேவாதி தேவன் அவன்சேவடிசேர்தும் அன்றே’

சீவக.1

என-அன்றும்,
 
  ‘பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து’

குறள்-978

என-ஆமும்
 
  ‘தகைமிகு குழைதந்தார் தாவில்சீர்த் தம் அடிகள்
முகைமிகு மலர்க்கண்ணி’

 

என-தம்மும்