| ‘இகும்மியா இகமதி மோசின் முன்னிலை அசைச்சொல் என்மனார் அறிந்திசி னோரே.’ | மு.வி.ஒ-20 |
|
எல்லாவிடத்தும் வரும் அசைச்சொற்கள் |
277. | யாகா பிறபிறக்கு அரோபோ மாதுஇகும் சின்குரை ஓரும் போலும் இருந்துஇட்டு அன்றுஆம் தான்தாம் என ஆன் என்ப அன்னபிறவும் அசைநிலை மொழியே. | தொல்.சொல். 266,மு.வீ.ஒ.13 |
இஃது அசைநிலை ஆமாறு கூறுகின்றது. இ-ள்: யாமுதலிய இருபத்தோர் இடைச்சொல்லும் அவை போல்வன பிறவும் தாம் சார்ந்த சொல்லை அசைத்து நிற்கும் சொல்லாம் என்றவாறு. வரலாறு: யாபன்னிருவர் மாணாக்கர் அகத்தியனாருக்கு என-யாவும், |
| ‘அறநிழல் எனக்கொண்டாய் ஆய்குடை அக்குடைப் புறநிழற்கீழ்ப் பட்டாளோ இவள்இவட் காண்டிகா’ | கலி. 99 |
என-காவும், |
| ‘யாம்சில, அரிசிவேண்டினேம் ஆகத் தான்பிற வரிசை அறிதலின் தன்னும் தூக்கி’ | புறம்.140 |
என- பிறவும், |
| ‘நசைதர வந்தோர் நசைபிறக்கு ஒழிய’ | புறம். 15 |
என-பிறக்கும், |
| ‘நோதக இருங்குயில் ஆலும் அரோ’ | கலி.33 |
என-அரோவும், |
| ‘எரியின் அன்ன செந்தலை அன்றில் பிரியின் வாழாது என்போ தெய்ய’ | |
என-போவும், |